පුවත්
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக சிறுபோக ஆரம்பக் கூட்டமானது 2025.03.06 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. M.நவரூபரஞ்சனி அவர்களின் தலைமையில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பொங்கல் விழா பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் தலைமையில் 2025.02.05 ஆம் திகதி புதன்கிழமையன்று இடம்பெற்றது.
கடுக்காமுனை நெக்கட்டியடி ஸ்ரீ விக்கினேஸ்வரர் முத்து மாரியம்மன் ஆலய முன்றலில் கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கூத்து, வசந்தன், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்ற அதே வேளை அருவி வெட்டி புதிய அரிசி பெற்று பண்பாட்டியலோடு கூடிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மண்முனை தென்மேற்கு மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக மகளிர் அணியினருக்குமான நட்புறவு எல்லே போட்டி 2025.01.28 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று களுதாவளை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தை எமது மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மகளிர் அணியினர் சுவீகரித்திருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. J.J. முரளிதரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வானது மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் 2025.02.04 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும் Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகவும் அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் பிரதேச செயலாளர் அவர்களினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சோபகிருது சித்திரை வருடபிறப்பை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம்,
கொக்கட்டிச்சோலை, மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்
திணைக்களம், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து நடாத்தும்
சித்திரை புதுவருட விளையாட்டு விழா - 2023.

இதில் குறிப்பிடப்பட்ட மரதன், தோணி ஓட்டத்திற்கான போட்டியாளர்கள் இன்று தொடக்கம் எமது பிரதேச செயலகத்தில் பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புகளுக்கு :- 0774849723, 0754381259, 0752307913















