පුවත්
ஐந்தாம் நாள் நிகழ்வு - 2026.03.09

நான்காம் நாள் நிகழ்வு - 2026.03.08
தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் நான்காம் நாளான 2026.03.08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று அம்பிளாந்துறை மேற்கு கதிரவன் விளையாட்டு மைதானத்தில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எமது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு. S. பார்த்தீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்றைய தினத்தின் இறுதி நிகழ்வாக தீப்பாசறை மற்றும் கிராமிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.


"முழுநாடும் ஒன்றாக " தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை நடைமுறையிப்படுத்தும் வகையில் 2026.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் முச்சக்கரவண்டி தரிப்பிடம் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பட்டிப்பளை பொலீஸ் பொறுப்பதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மூன்றாம் நாள் நிகழ்வு - 2026.03.07
தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் மூன்றாவது நாளான 2026.03.07 ஆம் திகதி சனிக்கிழமையன்று அத்தினத்தினை சிறப்பிக்கும் முகமாக விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் மற்றும் அதிதிகள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர். அத்துடன் அம்பிளாந்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்வினை முன்னிட்டு அம்பிளாந்துறை கலாசார மண்டப வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.


இரண்டாம் நாள் நிகழ்வு - 2026.03.06
தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் இரண்டாம் நாளான 2026.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று அம்பிளாந்துறை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்வினை முன்னிட்டு கதிரவன் விளையாட்டு மைதானத்தில் மரநடுகை ( 01 வேம்பு 4 இலுப்பை) நிகழ்வு இடம்பெற்றது.















