පුවත්
2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 8.30 மணியளவில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் அரச சேவை சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றியும், அவற்றை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் பிரதேச செயலாளர் அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களால் புதுவருட விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் இந்நிகழ்வானது உத்தியோகத்தர்களின் கலைநிகழ்வுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.




மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் இடம் பெற்ற “DITWAH” இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான உதவிக்கரம் நீட்டும் செயற்பாட்டில் எமது பிரதேச செயலக ரீதியாக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் பெறுமதி 2,496,209.00 ஆகும்.
பாதிக்கப்பட்ட எம்மக்களுக்காக உதவிக்கரம் நீட்டிய எமது பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்கள், சமூகமட்ட அமைப்புக்கள், நலன்விரும்பிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச்செயற்பாட்டில் பல்வேறு வழிகளிலும் உறுதுணையாக இருந்த எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரதேச செயலகம்,
மண்முனை தென்மேற்கு,
பட்டிப்பளை.







அஸ்வெசும முதலாம் கட்டத்தில் (2022/23) விண்ணப்பித்த அனைவரும் (கொடுப்பனவிற்கு தெரிவு செய்யப்பட்ட, தெரிவு செய்யப்படாத அனைவரும்) தங்களது தகவல்களை Online மூலம் மீள்சான்றுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
கீழ்க்குறிப்பிடப்படும் இணையத்தள முகவரியினுள் பிரவேசிப்பதன் மூலம் தங்களது தகவல்களை தாங்களே புதுப்பித்துக்கொள்ள முடியும்.
குறித்த செயற்பாட்டிற்கு தொலைபேசி இலக்கம் கட்டாயமானதாகும். தொலைபேசி இலக்கங்களில் மாற்றங்கள் இருப்பின் பிரதேச செயலகத்தினை அணுகி தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொள்ள முடியும்.


பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தில் கிராம மட்ட சமூக அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு 2025.12.22 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக பிரதேச செயலாளர் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான பிரஜாசக்தி செயற்திட்டத்தின் செயலாளர்களான சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான சமூக அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனக்கடிதங்களை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலிற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான கருத்தரங்கு நிகழ்வு 2025.07.02 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் IFS - Global Enterprise Software Solution Provider நிறுவனத்தின் Principal Engineer திரு. M.Vikanaraj அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்ததுடன் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.















