செய்திகள்




கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிராமிய விளையாட்டுக்கள் மற்றும் கிராமிய பாடல்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கும் நிகழ்வு 2026.03.29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆதவன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





சமூக பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்த கிராமங்களை உருவாக்கும் அரசின் கொள்கைக்கு அமைய மண்முனை தென்மேற்கு பட்டிபளை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமமான அரசடித்தீவு வடக்கு கிராமத்தில் இச்செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராம மக்களினால் சிரமதான நிகழ்வு கடந்த 2026.03.13 ஆம் திகதி நாடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.S.பார்த்தீபன், கிராம உத்தியோகத்தர் ஜீவிதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.






மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 101 வயதுடைய அமரசிங்கம் கண்மணி என்பவருக்கு 100 வயதினை பூர்த்தி செய்த வயோதிபருக்கான கொடுப்பனவு காசோலை 2026.03.10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தது.















