Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2026.02.10 ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களது தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

78 ஆவது சுதந்திர தின நிகழ்வு - 2026

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு 2026.02.04 ஆம் திகதி புதன்கிழமை இன்று மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச பொங்கல் விழா - 2026

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகமும் முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயமும் இணைந்து நடாத்திய பிரதேச பொங்கல் விழா நிகழ்வானது 2026.02.03 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் அக்கிராம ஏனைய ஆலய பரிபாலன சபையினர், 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தலைவர் (வண்ணக்கர்), பாடசாலை இனியம் குழு, கிராம மட்டக் கலைஞர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகம், முனைக்காடு ஸ்ரீ கொட்டாம்புலை பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான கிராம அபிவிருத்தி சங்கங்களும் இணைந்து 27 வகையான பொங்கல்கள் பொங்கப்பட்டதுடன் பல்வேறு வகையான கலைநிகழ்வுகள், விஷேட பூசை இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வுடன் பொங்கல் விழா நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.





பாதுகாப்பான மற்றும் முறையான புலம்பெயர்தல் விழிப்புணர்வு தொடர்பான பெண்களுக்கான குழு விளையாட்டு நிகழ்வினை நடாத்துதல் - 2026

IOM நிறுவனத்தின் அனுசரணையுடன் எதிர்வரும் 2026.02.05 மற்றும் 2026.02.06 ஆகிய இரு தினங்களில் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பிரதேச செயலக மட்ட விளையாட்டு கழக பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்/மமே/ அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் கலந்து கொள்ளவுள்ளது. எனவே, இதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.




















